தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உருவாக்குதல் மட்டுமல்ல, தமிழர்களும் கலை பண்பாட்டு தொழிநுட்ப வணிக சமூக வாழ்வியல் ரீதியாக முழுமைபெற்ற இனமாக வளர்ந்து நிலைபெறவேண்டும்.
தியாகவேள்வியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களையும், அவர்தம் வழியில் ஒன்றித்து பயணித்த எம்முறவுகளின் ஈகமும், தமிழர்களுக்கான புதியதோர் உலகத்திற்கான அடித்தளத்தை இட்டது போல, அதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லவேண்டிய பாரிய பொறுப்பு எம்மனைவர் கையிலும் உண்டு.
சமூகத்திற்கு தேவையான செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் பொறுப்புடன் - நாளுக்குநாள் வளர்ந்துவரும் நவீனதொழிநுட்பங்களை பயன்படுத்தி - கொண்டுசெல்லவேண்டிய பணியுண்டு. அப்பணியை எம்மால் முடிந்தவரை மேற்கொள்ள, இணையம் வாயிலாக உங்களுடன் இணைகின்றோம்.